பஞ்சாப்பில் போக்குவரத்து காவலர் மீது காரை மோதி பானட்டில் இழுந்துச் சென்ற ரவுடிகள்.!

0 1331

பஞ்சாப்பில், போக்குவரத்து காவலர் மீது காரை மோதி ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற வாகன ஓட்டியை போலீசார் தேடிவருகின்றனர்.

லூதியானா நகரில் முக்கிய சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஹர்தீப்சிங் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி சைகை காட்டியுள்ளார். ஆனால், காரில் இருந்த நபர் காரை வேகமாக இயக்கி அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றார்.

அப்போது, ஹர்தீப் சிங் மீது கார் மோதியதில் அவர் பானட் மீது விழுந்தார். கடும் நெரிசல் காரணமாக வேகம் குறைந்ததால் காரில் இருந்த விழுந்த ஹர்தீப் சிங், மீட்கப்பட்டார். காரில் இருந்த 2 நபர்கள் குற்றப் பின்னணி உள்ள ரவுடிகள் என்றும், விரைவில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments