500 நாட்கள் குகைக்குள் வாழ்ந்த மலையேற்ற வீராங்கனை.. பூமிக்கடியில், 230 அடி ஆழத்தில், தனிமையில் வாழ்ந்து சாதனை

0 8086
ஸ்பெயினில், பூமிக்கடியில் உள்ள குகைக்குள் 500 நாட்கள் தனிமையில் வாழ்ந்த மலையேற்ற வீராங்கனை குகையை விட்டு வெளியே வந்தார்.

ஸ்பெயினில், பூமிக்கடியில் உள்ள குகைக்குள் 500 நாட்கள் தனிமையில் வாழ்ந்த மலையேற்ற வீராங்கனை குகையை விட்டு வெளியே வந்தார்.

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி, 50 வயதான பீட்ரிஸ் ஃபிளாமினி, வெறும் ஆயிரம் லிட்டர் குடிநீருடன், கிரானாடா மலைப்பகுதி அருகே பூமிக்கடியில் உள்ள குகைக்குள் நுழைந்தார். 

230 அடி ஆழத்தில் வசித்துவந்த ஃபிளாமினி , கோ புரோ கேமராக்கள் மூலம் தனது அன்றாட நடவடிக்கைகளை படம் பிடித்துவந்துள்ளார். மேலும், புத்தக வாசிப்பு, ஓவியம் தீட்டுதல், உடற்பயிற்சி என பொழுது போக்கியுள்ளார்.

அவருடன் எவ்வித பேச்சு தொடர்பும் வைக்காதபடி அவரது நடவடிக்கைகளை உளவியலாளர்கள் லைவ் கேமரா மூலம் கண்காணித்துவந்தனர். 500 நாட்களுக்குப் பின் வெளியே வந்த ஃபிளாமினி, முதல் வேலையாக குளிக்கப்போவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments