கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டும்போது சேதமடைந்த சுவர்.. தட்டிக்கேட்டு கால்வாயில் இறங்கிய தம்பதி மீது சிமெண்ட் கலவையை கொட்டி அட்டூழியம்
கரூரில் கழிவுநீர் வடிகால் வாய்க்காக பள்ளம் தோண்டும்போது அருகிலிருந்த வீடு ஒன்றின் சுவர் சேதமடைந்த நிலையில், தட்டிக்கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளர் மீது ஒப்பந்ததாரர் சிமெண்ட் கலவையை ஊற்றிய காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
16ஆவது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜேசிபி கொண்டு பள்ளம் தோண்டும்போது அங்கிருந்த வீட்டின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது.
இதனால் வீடு பலமிழந்ததாகக் கூறப்படும் நிலையில், உட்பக்கமாக மேற்கூரையை தாங்கிப் பிடிக்க ஜாக்கிகள் அமைக்கப்பட்டன.
சேதமடைந்த சுவரை சீரமைக்க 43 ஆயிரம் செலவாகும் என்றும் அதனை தருமாறும் ஒப்பந்ததாரரிடம் வீட்டு உரிமையாளர் கேட்டுள்ளார்.
தர முடியாது என அவர் மறுத்ததால், வீட்டு உரிமையாளரும் அவரது மனைவியும் கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கண்டுகொள்ளாத ஒப்பந்ததாரர், சிமெண்ட் கலவையை இருவர் மீதும் ஊற்றியுள்ளார்.
Comments