அமெரிக்காவில் பால் பண்ணை ஒன்றில் பயங்கர தீ விபத்து.. 18,000 பசுக்கள் தீயில் சிக்கி உயிரிழப்பு

0 2078

அமெரிக்காவில், பால் பண்ணை ஒன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 18 ஆயிரம் பசுக்கள் உயிரிழந்தன.

பால் உற்பத்திக்கு பெயர் பெற்ற டெக்சாஸ் மாநிலத்திலுள்ள சவுத்ஃபோர்க் பால் பண்ணையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டு பண்ணை முழுவதும் தீ பரவியது.

பால் கரப்பதற்காக கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 18,000 பசுக்கள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன. பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஊழியர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மாட்டு சானத்தை உறுஞ்சும் vacuum cleaner வகை எந்திரம் அதிக சூடாகி வெளிப்பட்ட தீப்பொறியால், பண்ணையிலிருந்த மீத்தேன் வாயு பற்றி எரிந்து விபத்து நேர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments