கழிவறையில் பெண்ணை எட்டி பார்த்ததாக மேலாளருக்கு அடி-உதை.. தாக்குதல் நடத்திய பெண்ணின் உறவினர்கள் உள்பட 5 பேர் கைது!

0 3601

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணை நிறுவன மேலாளர் கழிவறையில் எட்டி பார்த்ததாகக் கூறி தாக்குதல் நடத்திய பெண்ணின் உறவினர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் ஜடேஜா பரத் சிங் என்பவர் கழிவறைக்கு சென்றபோது, அருகில் இருந்த மகளிர் கழிவறையை எட்டி பார்த்தாக புகார் எழுந்துள்ளது.

அங்கு பணியாற்றும் இளம்பெண் ஒருவர் தனது தந்தைக்கு இதனைத் தெரிவிக்க, அவரது ஆதரவாளர்கள் நிறுவனத்துக்கு வந்து மேலாளரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த மேலாளர் தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரைகைது செய்த ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments