ஏய் போலீசு என் மச்சான் மேலயே கை வைச்சிட்டியா? உன் பேர சொல்லு பார்க்கலாம்..! அய்யா போலீசுன்னு தெரியாமல் ஆடிட்டோம்

0 2960

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் குறைந்த விலைக்கு மது கிடைத்த உற்சாகத்தில் மூக்கு முட்ட குடித்து விட்டு போலீசிடம் வம்பிழுத்து முகநூலில் லைவ் செய்த 9 தமிழக இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போதையில் வம்பு செய்து போலீசிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

மது போதை தலைக்கேறியதால் போலீசாரிடம் மரியாதை இல்லாமல் வம்பு செய்து, வழக்கு வாங்கியதால் மட்டையாக மடங்கிய குடிகார பாய்ஸ் இவர்கள் தான்..

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அடுத்த முள்ளோடையில் உள்ள மதுக்கடை பாரில் அமர்ந்து மது அருந்திய 9 இளைஞர்கள் போதை தலைக்கேறிய நிலையில் பீர் பாட்டிலை எடுத்து உடைத்து பார் ஊழியர்களிடம் வம்பு செய்துள்ளனர்.

அவர்களை வெளியே அழைத்து வந்து போலீசார் எச்சரித்து அனுப்ப முயன்ற போது, செல்போனில் வீடியோ எடுத்தபடியே முகநூலில் லைவ் போவதாக கூறி போலீசாரிடம் வம்பிழுந்த இளைஞர்கள் உன் பேரை சொல்லு என்று மாறி மாறி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகின்றது

மதுக்கடை ஊழியர்களும் போலீசாரும் எவ்வளவோ சமாதனப்படுத்தி அனுப்ப முயன்றும், அடங்க மறுத்து அத்துமீறி இளஞ்சிறுத்தை போல சீறினர்.

பொறுத்து பார்த்த போலீசார் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அந்த 9 பேரையும் பூப்போல வண்டியில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்று தெளிய தெளிய கவனித்தனர்.

அடாவடியில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்து கடலூர் மாவட்டம் வடலூர் ஆர்.சி காலனியை சேர்ந்த சத்தியமூர்த்தி, ஜீவஜோதி உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்ட வடலூர் காவலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல செவ்வாய்கிழமை பொள்ளாச்சியில் சுடிதாருடன் போக்குவரத்தை நிறுத்தி போதை ஆட்டம் போட்ட திருப்பூர் கலைஞர் நகர் மகேஸ்வரி , வியாழக்கிழமை காங்கேயத்தில் வாகனங்களை மறித்தார்.

ஒரு ஆம்னி காரை மறித்து சாவியை பறித்துக் கொண்ட இந்த குடிகார குலவிளக்கு , அரசு பேருந்தை பார்த்ததும் அதனையும் மறித்து நின்றார்.

சாவியை கொடுக்க மறுத்து பெண் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால், அவரது கையில் இருந்த சாவியை பிடுங்கிய போலீசார், அவரை ரெண்டு தட்டு தட்டி சாலையோரம் நகர்த்திச் சென்றனர்.

இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் பொள்ளாச்சியில் போதையில் வாகனம் ஓட்டிவந்து, போக்குவரத்து போலீசாரிடம் குரலை உயர்த்தி வம்பிழுத்த மஞ்சள் சட்டை அணிந்த சி.எஸ்.கே ஃபேன் ஒருவரை படைபரிவாரங்களுடன் வந்த போலீசார் வேனில் அள்ளி போட்டுச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments