ஆந்திரா, ஒடிசா, பீகார், மேற்குவங்கத்திற்கு கடும் வெப்ப நிலை எச்சரிக்கை

0 1543

ஆந்திரா, பீகார், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரித்து அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும்போது வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம்.

கோடைக்காலத்தில் மத்திய , வடகிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும். ஜூலை மாதம் வரை வழக்கத்தை விட கூடுதலான வெப்பம் இருக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments