ரூ.1,749 கோடி பணப்பரிவர்த்தனை.. ஆருத்ரா மோசடி வழக்கில் கைதான மைக்கேல்ராஜ் பரபரப்பு வாக்குமூலம்..!
ஆருத்ரா மோசடி வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள நிறுவன இயக்குனர் மைக்கேல்ராஜ், 1,749 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மைக்கேல்ராஜ் ஆருத்ரா நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முழுவதும் கையாண்டதும், மோசடி பணத்தில் 25 கோடிக்கு சொத்து வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.
மைக்கேல்ராஜ் 1,749 கோடி ரூபாய் பணத்தை எந்தெந்த வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார் என பட்டியலை தயாரித்து அவர்களிடம் விசாரிக்க உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் கைதான இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ், கட்சி பதவி பெற பணம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜரான, இராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி டாக்டர் சுதாகர் பணத்தை வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஆருத்ரா மோசடியில் பணத்தை இழந்ததாக கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், பாஜக மாநிலத் அண்ணாமலையை சந்திக்க வேண்டுமெனக் கூறி கமலாலயம் வந்தனர். முற்றுகையிட முயன்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்..
Comments