குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அனுமதி மறுப்பு- கோயிலை பூட்டிய மாவட்ட நிர்வாகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட கோயிலை மாவட்ட நிர்வாகம்,காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
ஆலம்பள்ளம் கிராமத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மலைமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகே ஒரு சமூகத்தினரை விழாவில் பங்கேற்க அனுமதித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், 48 நாட்கள் நடைபெறும் மண்டகப்படியில் ஒரு நாள் மண்டகப்படியை வழங்குவதாக கூறி விட்டு, பின்னர் வழங்க முடியாதென சிலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் ஒருதரப்பினர் பங்கேற்காததால், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருப்பதை காரணம் காட்டி கோயிலை பூட்டிய மாவட்ட நிர்வாகம்
கிராமத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பை வலுப்படுத்தி உள்ளது.
Comments