புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தின் கடைசி ராணி ரமாதேவி காலமானார்

0 3554

புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தின் கடைசி ராணி ரமாதேவி வயது மூப்பால் காலமானார்.

புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக இருந்த போது கடைசி மன்னாராக இருந்தவர் ராஜ ராஜகோபால தொண்டைமான்.

இவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் தொண்டைமானின் மனைவியான 84 வயதான ராணி ரமாதேவி, வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். அவரது உடல் இச்சடி அரண்மனை வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அங்கேயே தகனம் செய்யப்பட்டது.

வாலிபால் மற்றும் பேட்மிட்டன் விளையாட்டில் சிறந்து விளங்கிய ராணி ரமாதேவி, தமிழ்நாடு தடகள சங்க தலைவராகவும், நீச்சல் சங்கத் தலைவராகவும், வாலிபால் சங்க துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments