"உள்கட்டமைப்புத்திட்டங்களால் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு" - பிரதமர் மோடி
நாட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் உள்கட்டமைப்புத்திட்டங்களால் வேலைவாய்ப்புகள் பெருகி வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு, மத்திய அரசுத்துறைகளில் பணி நியமன ஆணைகளை, டெல்லியில் இருந்தவாறே, காணொலி மூலம் பிரதமர் இன்று வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், உள்கட்டமைப்புத்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீட்டுத்திட்டங்களால், இளைஞர்களுக்கு பல்வேறு விதமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாக குறிப்பிட்டார்.
2014ம் ஆண்டு வரை நாட்டில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அவை
148 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், வேலைவாய்ப்பு பெருக்கத்திற்கு, சுகாதாரத்துறையே மிகச்சிறந்த உதாரணம் என்றும் கூறினார்.
நவீன தொழில்நுட்பங்களை கையாண்டு, டிரோன்களை தயாரித்து, டிரோன் பைலட்டுகளாக இந்திய இளைஞர்கள் உருவாகி வருவதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
Comments