பிரிட்டனில் மன்னர் 3-ம் சார்லசின் உருவம் பொறித்த நாணயங்கள் உருவாக்கம்..!

0 1392

பிரிட்டனில் மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அபேயில் மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் முடிசூட்டு விழாவை குறிக்கும் வகையில் 50 பென்ஸ் மற்றும் 5 பவுண்டுகள் உள்ளிட்ட நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

டியூடர் கிரீடத்தை அணிந்தபடி மன்னர் 3-ம் சார்லஸின் உருவப்படம் இருக்கும் இந்த நாணயங்களை பிரிட்டனை சேர்ந்த சிற்பி மார்ட்டின் ஜென்னிங்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார்.

மன்னர் 3-ம் சார்லஸ் கீரிடம் அணிந்தபடி உள்ள இந்த நாணயங்கள் இம்மாதம் 24-ம் தேதி புழக்கத்திற்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments