உலகம் முழுவதும் வளர்ந்து வரும் கடன் சுமையை குறித்து ஜி20 நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் - நிர்மலா சீதாரமன் வலியுறுத்தல்!
உலகம் முழுவதும் வளர்ந்து வரும் கடன் சுமையை குறித்து ஜி20 நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
உலக வங்கி தலைவர் David Malpass, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஜார்ஜீவா Georgieva உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர், கடன் கொள்கையில் வெளிப்படைத் தன்மை, தகவல் பரிமாற்றம், கடன் சூழலில் தனித்தனி செயல்பாடுகள் குறித்த தெளிவு போன்றவற்றை வலியுறுத்தினார்.
முன்னதாக, உலக வங்கிகளின் நடவடிக்கைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள ஜி 20 கூட்டமைப்பு உதவ வேண்டும் என்று நிர்மலா சீதாராமனிடம் அமெரிக்க நிதியமைச்சர் யெல்லன் கேட்டுக் கொண்டார்.
Comments