அறை எண் 301 ல் ஆபீசர் பையன்... இவரது மகனா இப்படி..?! கடுப்பான காவல் உயர் அதிகாரி

0 3925
அறை எண் 301 ல் ஆபீசர் பையன்... இவரது மகனா இப்படி..?! கடுப்பான காவல் உயர் அதிகாரி

திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் உள்ள ராயல் தனியார் தங்கும் விடுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர், பதின்பருவ சிறுமி ஒருவரை அழைத்து வந்ததாகவும், தற்போது இளைஞர் சிறுமியுடன் அறையில் தங்கி இருப்பதாகவும் விடுதி உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியின் 301 எண் அறையில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கு இருந்த சிறுமியிடமும் அந்த இளைஞரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

17 வயதான அந்த சிறுமியோ தனது தாயின் உதவியுடன், தன்னை கட்டாயப்படுத்தி இந்த அறையில் அடைத்து வைத்து இளைஞர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி உள்ளார்.

அந்த இளைஞர், தான் தமிழக காவல்துறையில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரியின் மகன் எனக் கூறி போலீசாரை மிரட்டியதுடன், தனது செல்போனின் வால்பேப்பராக வைத்திருந்த அந்த அதிகாரியின் படத்தை காண்பித்துள்ளார்.

தான் சாதாரண ஆள் இல்லை தன்னை கண்டால் காவல் உயர் அதிகாரிகளே அஞ்சுவர் என்று கூறி தன்னுடைய செல்போன் தொடர்பு எண்களில் உள்ள பெரிய புள்ளிகளை எல்லாம் பட்டியலிட்டதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து தகவல் சம்பந்தப்பட்ட காவல் உயர் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் குறிப்பிட்ட அந்த இளைஞரை யார் என்றே தெரியாது என்று மறுத்துள்ளார்.

போலீசாரின் முறையான விசாரணையில் அவன் சிலந்திவலை என்ற பெயரில் பத்திரிக்கை நடத்துவதாக கூறி சுற்றித்திரியும் ஒரு டுபாக்கூர் ஜேர்னலிஸ்ட் பர்பீன் கிரிஸ்டல் ராஜ் என்பது தெரியவந்தது.

உண்மையில் அவன் காவல் அதிகாரியின் மகனும் இல்லை, உறவினரும் இல்லை என்பதும் உறுதியானது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரது மகன் பிரபின் கிறிஸ்டல்ராஜ், கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிக்கையாளன் என்ற போர்வையில் சில காவல் உயர் அதிகாரிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, புகார்களில் சிக்கும் பிரபலங்களை மிரட்டி பணம் கறந்து வந்ததாகவும், அந்தவகையில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவரும் திருச்சியைச் சேர்ந்த ரமீஜா பானுவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனை பயன்படுத்தி அவரிடம் சிக்கிய சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் பார்த்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுமியின் தாய், பர்பீன் கிறிஸ்டல்ராஜ், ரமீஜா பானு உள்ளிட்ட 3 பேரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

15 வயதிலேயே அந்த சிறுமியை பெரம்பலூரை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு கட்டாயப்படுத்தி சிறுமியின் தாய் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக சிறுமி தனது கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், கடனை அடைப்பதற்காக, ரமீஜா பானுவின் வீட்டிற்கு சிறுமியை வேலைக்கு அனுப்பி உள்ளார்.

அப்போது தான் பிரபின் கிரிஸ்டல் ராஜுடன் சேர்ந்து கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments