கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்று வேட்புமனுத் தாக்கல்... பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி!

0 1339

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் 10-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் 189 வேட்பாளர்களை பாஜக ஏற்கனவே அறிவித்த நிலையில், நேற்று இரவு 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜகதீஷ் ஷெட்டரின் பெயர் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 93 தொகுதிகளுக்கும் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments