யூடியூப் ஆட்டக்காரின்னா இப்படியா மிரட்டுவீங்க..? பரமேஸ்வரி கண்ணீர் புகார்..! கரகாட்டக்காரர்கள் கலாட்டா பின்னணி

0 5132

யூடியூப் வீடியோ மூலம் பாப்புலரான கரகாட்ட பரமேஸ்வரி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

கரகத்தை தலையில் வைத்து ஆடும் திறமையான கலையான கரகாட்டம் காலமாற்றத்துக்கு ஏற்ப, கரகத்தை மறந்து கவர்ச்சியை நம்பியதால், மக்களை விட்டு மெல்ல விலகி நிற்கிறது. இதற்கிடையே தனது கவர்ச்சி ஆட்டத்தை யூடியூப்பில் பதிவேற்றி பிரபலமானவர் கரகாட்டம் பரமேஸ்வரி..!

மதுரை திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த 29 வயதான பரமேஸ்வரியை புகழ்ந்து பல்வேறு யூடியூப்பர்கள் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். கரகாட்ட கலையை வளர்ப்பதற்காக, உயிரையே கொடுப்பதாக பேட்டி அளித்த பரமேஸ்வரியை, அவருக்கு தொழில் கற்றுக்கொடுத்ததாக கூறப்படும் மணிமேகலை என்பவர் செல்போனில் அழைத்து எச்சரித்துள்ளார். அதே போல அலங்காநல்லூர் காளீஸ்வரன் என்ற கரகாட்ட பப்பூனும் பரமேஸ்வரியின் ஆட்டத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு,பரமேஸ்வரி மீது மதுரை எஸ்.பி அலுவலகத்தில் புகாரும் அளித்தனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாகவும், போன் மூலமாகவும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத்திடம் பரமேஸ்வரி புகார் மனுஅளித்தார்.கரகாட்ட கலையை கெடுக்கும் வகையில் கவர்ச்சியாக ஆடுவது சரியா ? என்ற கேள்விக்கு, தான் கவர்ச்சியாக ஆடவில்லை என்று மறுத்தார், உங்கள் அங்க அசைவுகள் அப்படித்தானே இருக்கின்றது என்றதும் வெட்கத்தால் சிரித்து மலுப்பினார்.

கணவரை இழந்த நிலையில் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே ஊர் ஊராக சென்று கரகாட்டம் ஆடுவதாகவும், யூடியூப்பிலும் தனியாக வீடியோ பதிவிடுவதாகவும் தெரிவித்த பரமேஸ்வரி, தான் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதால்,
தன் மீது கொண்ட பொறாமையின் காரணமாகவே திருநெல்வேலி மணிமாலா, திண்டுக்கல் ஜோதி, பிரியா , அலங்காநல்லூர் காளீஸ்வரன் உள்ளிட்டோர் தனக்கு கொலை விரட்டல் விடுப்பதாக கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஆட்டக்காரர்களுக்கும் வெளியூர் ஆட்டக்காரர்களுக்கும் உள்ள தொழில் போட்டி என்பது, நம்ம கரகாட்டக்காரன் காலத்திற்கு முன்பு இருந்தே உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments