இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சர்வதேச தரத்தில் உள்ளது - அமெரிக்கா

0 1940

இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சர்வதேச தரத்தில்  இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் The Federal Aviation Administration என்ற அமைப்பு விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பை கண்காணித்து வருகிறது. அமெரிக்காவுக்கு வரும் விமானங்கள் பாதுகாப்பான முறையில் இயக்கப்படுகின்றனவா என்று கவனிப்பதே இதன் இலக்கு.

இந்த அமைப்பு இந்திய விமானப்போக்குவரத்து இயக்குனரகத்துக்கு எழுதிய கடிதத்தில் இந்தியா பாதுகாப்பு விஷயத்தில் சர்வதேச விதிகளைக் கடைபிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தர வரிசையில் இந்தியா இடம்பெற்றதனால் அமெரிக்காவில் இந்திய விமானப் போக்குவரத்து சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments