இலவச வீட்டுமனைப்பட்டா இடத்தை அளவீடு செய்துதரக்கோரி, வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா

0 1430

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைக்கான இடத்தினை அளவீடு செய்து தரக்கோரி, வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தூக்கு கயிறுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இடத்தை அளவீடு செய்வது தொடர்பாக, வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததோடு, மாற்றுத்திறனாளிகளை அதிகாரிகள் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனைக்கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் சுசீலா, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments