கோவிட் தடுப்பூசிகள் காலாவதியானதால் உற்பத்தி நிறுத்திவைப்பு..!
கோவிட் தடுப்பூசிகளுக்கான தேவை குறைந்ததாலும், காலாவதியான சுமார் 50 மில்லியன் டோஸ்களை இந்த ஆண்டு தொடக்கத்தில் அழிக்க நேர்ந்ததாலும், அதன் உற்பத்தி கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசிகளின் கையிருப்பு மிகக்குறைந்த அளவே உள்ள நிலையில், மீண்டும் கோவிட் அலை பரவி வருவதால் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 31 வரை கோவாக்சின் காலாவதியானதையடுத்து மும்பையில் உள்ள உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதே போல் கோவிஷீல்ட் உற்பத்தியும் பிப்ரவரி மாதத்துடன் முடிவுக்கு வந்து விட்டது. பல்வேறு மாநிலங்களில் நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளும் ஏப்ரல் வரைதான் தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாகக் கூறுகின்றன.
சென்னையில் மட்டும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று CORBEVAX தடுப்பூசி கையிருப்பு இருப்பதாகக் கூறுகிறது. தமிழ்நாட்டின் தென் பகுதிகளிலும் பல நகரங்களில் கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் காலாவதியான சுமார் 50 மில்லியன் கோவாக்சின் டோஸ்களை அழிக்க வேண்டியிருந்ததால், பாரத் பயோடெக் நிறுவனம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Comments