ராஜஸ்தான் மாநிலத்தின் முதலாவது '' வந்தே பாரத் ரயில் '' - கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர்- டெல்லி கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அறிமுகநாளான இன்று ஜெய்ப்பூர், டெல்லி இடையேயும், நாளை முதல் அஜ்மீர்-டெல்லி இடையேயும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது, OHE எனப்படும் மேல் வழித்தட மின்சாரம் கீழ் இயங்கும் உலகின் முதல் செமி-ஹை ஸ்பீடு பயணிகள் ரயிலாக கருதப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சுதந்திரத்துக்கு பிறகு, ரயில்வே நவீனமயமாக்கலுக்கு சுயநலமும், மோசமான அரசியலும் தடையாக இருந்ததாகவும், ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக வாங்கும் நிலை காணப்பட்டதாகவும் விமர்சித்தார்.
2014ம் ஆண்டு மத்தியில் தனது தலைமையிலான அரசு அமைந்தபிறகே, ரயில்வேயில் புரட்சிகர மாற்றம் ஆரம்பித்ததாகவும் கூறிய பிரதமர், வந்தே பாரத் ரயிலானது, நாட்டின் வளர்ச்சி, நவீனம், சுயசார்பு, ஸ்திரத்தன்மைக்கு அடையாளமாக உருவெடுத்திருப்பதாகவும், இன்றைய வந்தே ரயில் பயணமானது, நாளைய வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பயணமாக இருக்கும் என்றும் கூறினார்.
Comments