சிவகங்கையில் தரமற்ற பொருட்களால் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டப்படுவதாக புகார்

0 1727
சிவகங்கையில் தரமற்ற பொருட்களால் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டப்படுவதாக புகார்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே அரசுப் பள்ளி கட்டடம் கட்டுவதற்காக உபயோகப்படுத்தும் செங்கல் மற்றும் எம்.சாண்டு மணல் போன்றவை தரமற்று இருப்பதால் கட்டடத்தின் பாதுகாப்பினை உறுதி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

கல்குறிச்சி கிராமத்தில் செயல்படும் உயர்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், இடநெருக்கடி காரணமாக, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவசரகதியில் தரமற்ற பொருட்களைக் கொண்டு கட்டடம் கட்டப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கட்டடம் கட்டுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள செங்கல், இரண்டு நாள் மழைக்குக் கூட தாங்காமல், சிதைந்து மண்ணோடு மண்ணாக மாறுவதாக கூறும் மக்கள், இதனை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்கின்றனரா என்று சந்தேகம் எழுப்புகின்றனர்.

கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆராயாமல் பணியை தொடர்ந்தால் கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments