கருத்தரங்கில் கலந்து கொள்ள மதுரைக்கு வந்த குஜராத் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

0 4460

மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த குஜராத் மாணவியை உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளர்.

ஆன்லைனில் சார்ட்டர்ட் அக்கவுண்ட் படித்து வரும் அகமதாபாத்தை சேர்ந்த மாணவி, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்தபோது, தெப்பக்குளம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். கருத்தரங்கிற்காக வந்து அதே விடுதியில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த அஷீஷ் ஜெயின், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெரோம் கதிரவன் ஆகியோர் மாணவிக்கு அறிமுகமாகியுள்ளனர்.

இந்நிலையில், மாணவிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு மருந்தும், உணவும் வாங்கிக் கொடுத்த நிலையில், உணவை உட்கொண்ட சிறிது நேரத்தில் மயக்கமடைந்ததாக கூறப்படும் நிலையில், மாணவியை இருவரும் தனித்தனியே பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.

குஜராத் திரும்பிய மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படவே பெற்றோரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்ததையடுத்து உள்ளூர் காவல்துறையினரிடம் புகாரளித்த நிலையில் மதுரையில் புகாரளிக்க அவர்கள் கூறியுள்ளனர். ஆன்லைன் மூலமாக மதுரை மாநகர காவல் ஆணையருக்கு மாணவி புகார் அளித்ததையடுத்து உதவி ஆணையர் காமாட்சி, மாணவியிடம் வாட்ஸ்அப் வீடியோவில் நடத்திய விசாரணையின் மூலம் புகார் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments