இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்டுள்ளது - ஐ.எம்.எப்

0 3083
இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்டுள்ளது - ஐ.எம்.எப்

உலகிலேயே மிகவும் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் நாடு இந்தியா என்று சர்வதேச நாணய நிதயமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டுஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 8 சதவீதமாக இருந்தது. இது இந்தியாவை வலுவானஇடத்தில் வைத்து இருப்பதாகவும் இந்தியா மேலும் பல்வேறு வசதிகளுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று ஐ.எம்.எப். கேட்டுக்கொண்டுள்ளது.

இருப்பினும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக முன்பு கணிக்கப்பட்டிருந்த நிலையில் 5 புள்ளி 9 ஆக இருக்கும் என்றும் ஐஎம்எப் குறைத்து மதிப்பிட்டுள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற ஐ.எம்.எப். வசந்தகால கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். முன்னதாக அவர் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டிலும் பங்கேற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments