சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா வியூகம்... எல்லையில் தயாராக நிற்கும் ரபேல் விமானங்கள், பிரம்மோஸ் ஏவுகணைகள்
சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இந்தியா தனது முக்கிய எல்லைப்புதிகளைப் பாதுகாக்க பிரம்மோஸ் ஏவுகணைகள், ரபேல் விமானங்களை களம் இறக்கியுள்ளது.
விமானப் படைத் தளபதி அனில் சவுகான், மேற்கு வங்காளத்தில் உள்ள ஹாசிமாரா விமானப்படைத்தளத்தைப் பார்வையிட்டதையடுத்து 18 ரபேல் போர் விமானங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று இந்தியா - ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான 290 கிலோ மீட்டர் வரையிலான இலக்குகளை பாய்ந்து சென்று பிரம்மோஸ் ஏவுகணைகளும் எல்லைப் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் டிஆர்டிஒ இணைந்து தயாரித்த, வானில் உள்ள இலக்கை அழிக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும் எல்லைப் பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளது.
Comments