காலை 11 மணி முதல் 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் - அமைச்சர் அறிவுறுத்தல்
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கோடைகால கடும் வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், வெயில் அதிகரிக்கும் நிலையில் மதுபானங்கள், டீ, காபி, கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களையும், அதிக புரத சத்து மற்றும் பழைய உணவுகளையும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டா
Comments