கடும் நிதி பற்றாக்குறையால் இலங்கையில் உள்ளாட்சித்தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைப்பு..!
கடும் நிதி பற்றாக்குறையால் இலங்கையில் வரும் 25ஆம் தேதி நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 9ஆம் தேதியே உள்ளாட்சி தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் 50 கோடி ரூபாய் நிதி கோரியிருந்த நிலையில், அரசாங்கம் 4 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளது.
தபால் வாக்குப்பதிவுக்குத் தேவையான வாக்கு சீட்டுகளை கூட அச்சிட முடியாமல் இம்மாதம் 25ஆம் தேதிக்கு உள்ளாட்சித்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போதுவரை நிதி பற்றாக்குறை நீடித்துவருவதால், காலவரையின்றி தேர்தலை ஒத்திவைப்பதாக, இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Comments