தனியார் தொலைக்காட்சியின் கட்டண உயர்வை எதிர்த்து கேபிள் டிவி ஆபரோட்டர்கள் ஆர்ப்பாட்டம்..!

0 3186

தனியார் தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் இதுவரை இணைப்பு ஒன்றுக்கு 25 ரூபாய் கட்டணமாக வாங்கிய நிலையில் தற்பொழுது அதனை 43 ரூபாயாக உயர்த்தியதை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், DTHக்கு மாறுங்கள் என்ற வகையில் அந்த தொலைக்காட்சி நிறுவனம் விளம்பரப்படுத்தியதை கண்டித்து விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்கான குரல்வளத் தேர்வு நடைபெற்று வரும் தனியார் பள்ளியின் முன்பு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து, காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments