பண்ணாரி அம்மன் திருக்கோயில் விவகாரம்.. ஆண்டவனே வந்தாலும் வனத்துறை நிலத்தை எடுக்க முடியாது - அமைச்சர் துரைமுருகன்

0 14514

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் திருக்கோயிலுக்கு வனத்துறையின் 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டுமென சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

தீர்மானத்தை முன்மொழிந்துபேசிய கே.ஏ.செங்கோட்டையன், வனத்துறை வழங்கும் இடத்திற்கு பதிலாக மாற்று இடம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் பேசினார்.

பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை வழங்கும் நிலத்திற்கு ஈடாக ஒன்றிய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாற்று இடம் தரப்பட்டால் வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.

அப்போது பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ஆண்டவனே அவதாரம் எடுத்து வந்தாலும் சரி, வனத்துறை நிலத்தை அவ்வளவு எளிதாக வாங்க முடியாது என்று பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments