கணவன் - ஆண்நண்பனுடன் இரட்டை சவாரி செய்த பெண்.. பலி வாங்கப்பட்ட மகன்.. கணவன் மீண்டும் வந்ததால் நிகழ்ந்த விபரீதம்..!
சென்னையில், மதுபோதைக்கு கணவன் அடிமையானதால் ஆறுதல் தேடிய பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்தவரே, அவரது மகனுக்கு எமனாக மாறி கொலை செய்ததால் தற்போது இரண்டு குடும்பங்கள் நிம்மதியிழந்து தவிப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த இளஞ்செழியனுக்கு திருமணமாகி தனலட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
மதுவுக்கு அடிமையான இளஞ்செழியன் பிளம்பர் வேலைக்கு சரிவர செல்லாமல் மனைவியுடன் தினமும் சண்டையிட்டு வந்ததால், குடும்ப சூழலால் புளியந்தோப்பில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றார் தனலட்சுமி. அங்கு அறிமுகமான கார்த்திக்கிடம் தனது குடும்ப கஷ்டத்தை கூறவே, அதனை தீர்ப்பதாகக் கூறிய கார்த்திக், போதை மறுவாழ்வு மையத்தில் இளஞ்செழியனை சேர்த்து விட்டார்.
இதனால், இருவருக்குமிடையே இருந்த நட்பு திருமணம் கடந்த உறவாக மாறியதால், ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையிலும், தனலட்சுமியையும் தனது வீட்டின் அருகிலேயே குடியமர்த்தி 2 வீட்டிற்கும் மாறி மாறி சென்று வந்துள்ளார் கார்த்திக்.
இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வெளியே வந்த இளஞ்செழியன், தனது மனைவி கார்த்திக்கோடு இருப்பதை தெரிந்துக் கொண்டு, அவரை தன்னோடு வருமாறு அழைத்தார். பிள்ளைகளும், அப்பா திருந்தி விட்டதால் அவருடன் சென்று விடலாம் எனக்கூறியுள்ளனர்.
இதனால், வேறுவழியில்லாமல் விருகம்பாக்கத்திற்கு குடிபெயர்ந்த தனலட்சுமி, செல்போன் மூலமாக கார்த்திக்கிடம் பேசி வந்துள்ளார். அப்போது, தனது மூத்த மகன் தான் நமது பிரிவிற்கு காரணமெனவும் கூறியுள்ளார்.
காதலியின் பிரிவால் ஆத்திரமடைந்த கார்த்திக், கடந்த 7ம் தேதி தனலட்சுமியின் வீட்டிற்கு சென்ற போது, கதவைத் திறந்த இளஞ்செழியனின் 17 வயது மகன் மதன்குமாரை, கத்தியால் வயிறு, கையில் குத்திவிட்டு கார்த்திக் தப்பியோடியதாக சொல்லப்படுகின்றது. படுகாயமடைந்த மதன்குமார் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 3 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.
விருகம்பாக்கம் போலீசார், கார்த்திக்கை கைது செய்து நடத்திய விசாரணையில், தனது 5 வருட காதலி தன்னை விட்டு பிரிய மதன்குமார் தான் காரணமென கருதி அவரை கத்தியால் குத்தியதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
மது, மாது போதைகளால் பாதை மாறிய ஆண்களால் இரு குடும்பங்கள் தற்போது தவித்து வருகின்றன.
Comments