திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெருமந்தூரில் 3ஆம் கட்ட அகழாய்வு பணியில், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், பானை ஓடுகள் கண்டெடுப்பு
திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெருமந்தூரில் நடைபெறும் 3ம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு கடந்த 2016 மற்றும் 2018ம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வு பணியின் போது மனித எலும்பு துண்டுகள், கல் ஆயுதங்கள், செங்கற்கலால் கட்டப்பட்ட வட்டவடிவ கிணறு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் காலத்திய கல்வெட்டுகளும் கிடைக்கப்பெற்றன.
இங்கு கடந்த 6ம் தேதி மூன்றாம் கட்ட அகழாய்வு தொடங்கிய நிலையில், 40 சென்டிமீட்டர் ஆழத்தில் தோண்டப்பட்ட 3 குழிகளில் இருந்து பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.
Comments