'வாரம் 100 கிலோ வரை அறுவடை..' வாட்டர் ஆப்பிளை நாகப்பட்டினத்தில் சாகுபடி செய்து இளைஞர் சாதனை
குளிர் பிரதேசங்களில் வளரக்கூடிய மருத்துவ குணம் கொண்ட தண்ணீர் ஆப்பிள் செடியை நாகப்பட்டினத்தில் முதன்முறையாக சாகுபடி செய்து பட்டதாரி இளைஞர் வெற்றி பெற்றிருக்கிறார்.
கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் ஒரு ஆள் உயரம் மட்டுமே வளரக்கூடிய தண்ணீர் ஆப்பிள் மரக்கன்றுகளை, தெற்கு பொய்கைநல்லூரை சேர்ந்த இளைஞர் சந்திரபோஸ் என்பவர் கொடைக்கானலில் இருந்து வாங்கி வந்து தனது தோட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடவு செய்துள்ளார்.
தற்பொழுது மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்கத் தொடங்கியதையடுத்து வாரத்திற்கு நூறு கிலோவிற்கும் மேல் அறுவடை செய்து, கிலோ 100 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்து நல்ல வருவாய் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மானிய விலையில் இதுபோன்ற செடிகளை வழங்கினால் நல்ல வருவாய் ஈட்ட முடியும் என்பது சந்திரபோஸின் கோரிக்கையாக உள்ளது.
Comments