கொரோனா பூஸ்டர் தடுப்பூசியாக கோவோவாக்ஸூக்கு மத்திய அரசு அனுமதி.. விரைவில் கோவின் இணைய தளத்தில் கிடைக்க மத்திய அரசு ஒப்புதல்!
கொரோனா தடுப்பு பூஸ்டர் தடுப்பூசியாக கோவோவாக்ஸ் விரைவில் கோவின் இணைய தளத்தில் கிடைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சீரம் நிறுவனத்தின் கோவோவின் தடுப்பூசியை பெரியவர்களுக்கு பூஸ்டர் டோஸாக ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு கோவோவாக்ஸ் ஐ செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவோவேக்ஸின் தடுப்பூசிக்கு கடந்த ஜனவரி 16ம் தேதி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கோவோவேக்ஸ் ஒரு டோஸ் 225 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments