தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குள் தமிழ்நாடு அரசு அனுமதிக்காத எந்தவொரு பணியையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
ஆலையில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்க அனுமதிக்கக்கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கழிவுகளை மட்டும் நீக்க வேதாந்த குழுமத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் மேற்கொள்ள அனுமதி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்து, விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையின் பாதுகாப்பை மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரிக்கப்பட்டது.
Comments