பல்கலைக்கழகங்களில் ChatGPT பயன்படுத்த ஜப்பான் தடை..!
ஜப்பான் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் ChatGPT பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு கொண்ட சாட்போட் மிகப்பெரிய கட்டுரைகள் மற்றும் கணினி குறியீடுகளை கூட சில நொடிகளில் எழுதும் திறமை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த ChatGPT-ஐ பயன்படுத்துவதால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படும் என்பதால் ChatGPT பயன்படுத்தி கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் தயாரிக்க மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்படாத ஆராய்ச்சி முடிவுகளை மதிப்பிடுவதற்கும், மொழிபெயர்ப்பதற்கும் ChatGPT-ஐ பயன்படுத்தினால் தரவு முடிவுகள் திருடு போகலாம் எனவும் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments