"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின் பள்ளியில் சேர்ந்தார் சிறுமி டான்யா
சென்னை, ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, முதலமைச்சரின் உத்தரவின்பேரில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சிறுமி டான்யா தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்கியம் தம்பதியின் ஒன்பது வயது மகள் டானியா முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதற்கட்ட முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சையும், டிசம்பர் மாதம் இரண்டாம்கட்ட அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் முன்னிலையில் சிறுமி டானியா பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
Comments