கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் - மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நேரடி விசாரணை துவக்கம்..!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விசாரணையை தொடங்குகிறார் .
இன்று காலை 10 மணி முதல் 4 மணிவரை அம்பை தாலுகா அலுவலகத்தில் அவர் விசாரணையை மேற்கொள்கிறார்.
அப்போது தகவல் அளிக்க விரும்புபவர்கள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகலாம் என்றும், நேரடியாக தகவல் அளிக்க இயலாதவர்கள் மின்னஞ்சல் மூலம் தங்களது தகவல்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments