கல்குவாரி பாறைக்குட்டையில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு..!

0 1793

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி பாறைக்குட்டையில் குளித்துக் கொண்டிருந்த இரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் கொட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்-அழகு தம்பதியினரின் 13 வயதான இரட்டை சிறுமிகளான சஹானா, சமீதா இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு தாளம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு கோயில் திருவிழாவிற்காக சென்றனர்.

இருவரும் வீட்டினருகே உள்ள குட்டையில் குளிக்கச் சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பாட்டி பூவி, அவர்களைத் தேடி சென்றுள்ளார். அங்கு, குளிப்பதற்காக எடுத்துச் சென்ற கப் மட்டுமே இருந்ததால் சந்தேகமடைந்த பூவி ஊர்மக்களை அழைத்து குட்டையில் தேடினார். இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments