"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்..!
அந்தமான் நிகோபார் தீவுகளில் கடலுக்கு அடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிறன்று பிற்பகலில் 4 புள்ளி 9 என்ற ரிக்டர் அளவில் கேம்பெல் பே பகுதியில் முதல் நிலநடுக்கமும், அதையடுத்து நிகோபார் தீவுப்பகுதியில் 4 புள்ளி ஒன்று என்ற அளவில் 2ஆவது நிலநடுக்கமும் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஐந்து புள்ளி மூன்று, ஐந்து புள்ளி ஐந்து ஆகிய ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை
Comments