சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு போதையில் வந்த வடமாநில இளைஞர்... ரயில்வே காவலர் அடித்ததால் பயத்தில் ஓடி கீழே விழுந்து காயம்

0 2276
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு போதையில் வந்த வடமாநில இளைஞர்... ரயில்வே காவலர் அடித்ததால் பயத்தில் ஓடி கீழே விழுந்து காயம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர் அடித்ததால் அச்சத்தில் வெளியே ஓடி வந்த வடமாநில இளைஞர் ஒருவர் கால் தடுக்கி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் வடமாநில இளைஞர் ஒருவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது அந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் அவரிடம் விசாரித்த போது முறையாக பதில் கூறாததால் அடித்ததாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments