ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் : தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

0 1401
ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் : தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

இயேசு உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாள் தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.. இதே போன்று நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கோவிலில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபட்டனர்....

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம், கோவை இம்மானுவேல் ஆலயம் மற்றும் திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்து நாதர் ஆலயம் மற்றும் சிம்ஸன் நகர் தூய மீட்பர் ஆலயம்,தூத்துக்குடி திரு இருதய ஆலயம் ,கரூர் மாநகரில் வடக்கு பிரதட்சணம் சாலையில் புனித தெரசம்மாள் ஆலயம், மற்றும் புதுச்சேரி , காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments