கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல்.. முதியோர், கர்ப்பிணிகள், நோய் பாதிப்புள்ளவர்கள் முகக்கவசம் அணிய வலியுறுத்தல்..!

0 1989

கேரளாவில் கோவிட் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, முதியோர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு போன்ற பாதிப்புகள் உடையோர்  கட்டாயம் முகக்கவசம் அணியும்படி மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலத்தில் ஒரே நாளில் புதிதாக 1800 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். 

தொடர்ந்து, வீணா ஜார்ஜ் விடுத்த அறிக்கையில், எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய மூன்றுமாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments