ஆந்திராவில், 15 அரிய வகை கனிமங்கள் பூமிக்கு அடியில் கண்டுபிடிப்பு..!
ஜம்மு - காஷ்மீரை தொடர்ந்து, ஆந்திர பிரதேசத்தில் 15 அரிய வகை உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம், ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் 15 அரிய வகை கனிமங்களை கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வில் அரிய கனிமங்கள் என அறியப்படும் லாந்தனம், சீரியம், பிரசியோடைமியம், நியோடைமியம், ஹஃப்னியம், டாண்டலம், நியோபியம், சிர்கோனியம், ஸ்காண்டியம் ஆகிய உலோகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மருத்துவ தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை பயன் பாடுகளில் இவ்வகை அரிய கனமங்கள் முக்கிய பங்காற்றுகிறது.
Comments