ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய பொது இடங்களில் கேமராக்கள்..!
ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்காக பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி, பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம், முறையாக ஹிஜாப் அணியாத இளம்பெண் மாஷா அமினி போலீஸ் காவலில் பலியானதைத் தொடர்ந்து, அந்நாட்டு பெண்கள் ஹிஜாப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹிஜாப் சட்டத்தை மீறும் பெண்களை கேமராக்கள் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும் என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
Comments