“மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, தெலங்கானா அரசு ஒத்துழைப்பு தரவில்லை” - பிரதமர் மோடி

0 1462

தெலங்கானாவில், மக்களுக்கு பலன் தரக்கூடிய மத்திய அரசின் பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற, மாநில அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

ஹைதரபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்காததால், பல வளர்ச்சித்திட்டங்கள் தெலங்கானாவில் தாமதமாக்கப்படுவது தனக்கு வேதனையளிப்பதாக தெரிவித்தார்.

தெலங்கானா அரசு வளர்ச்சி திட்டங்களை தடுக்க வேண்டாம் எனக்கேட்டுக்கொண்ட பிரதமர், இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாக  குறிப்பிட்டார். தெலங்கானாவில், வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் சிலர், மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்களில் இருந்து தங்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக விமர்சித்தார்.

ஊழலும், வாரிசு அரசியலும் வேறு வேறல்ல எனக் கூறிய பிரதமர், வாரிசு அரசியல் உள்ள இடத்தில், ஊழல் வளர்ச்சி பெறும் என தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments