யாரை கேட்கிறாய் வரி..? எதற்கு கேட்கிறாய் சுங்க கட்டணம்..! தூள் தூளாக்கிய சம்பவம்..! டோல் முருகன் ஆதரவாளர்கள் ஆவேசம்
மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுங்கச்சாவடியில் உள்ள சேர்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது..
தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்
இவர்கள் வந்த கார் அச்சரப்பாக்கம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியை கடந்தபோது இவர்கள் வந்த கார்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் த.வா.க வினர் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இன்னும் எத்தனை ஆண்டு காலம் சுங்க கட்டணம் வசூலிப்பீர்கள் என்றும் ஆளும் கட்சியினருக்கு எப்படி சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லையோ அது போல தங்களையும் அனுமதிக்க கூறி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகின்றது.
வாக்குவாதம் நீண்ட நிலையில் மாவட்ட செயலாளர் ஆனந்தன் சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சேர்களை அடித்து உடைத்து பறக்க விட்டதோடு அனைத்து வாகனங்களையும், சுங்க கட்டணம் இன்றி செல்ல வழி ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
சிசிடிவி காட்சிகளுடன் ஆனந்தன் மீது சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சார்பாக அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடியில் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் ஆத்தூர் சுங்கச்சாவடியில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்
ஏற்கனவே ஒரு முறை தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ வேல் முருகன் ஆதரவாளர்கள் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடியை சல்லி சல்லியாக நொறுக்கியதால், சுங்கம் தவிர்த்த டோல் முருகன் என்று நெட்டிசன்களால் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
Comments