5 ஆம் தலைமுறை போர் விமானம்: இந்தியா தயார்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட போர் விமானத்தை 5-ம் தலைமுறை போர் விமானமாக மாற்றுவதற்கான பொறியியல் மேம்பாட்டு பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேடார் உள்ளிட்ட எந்த உளவு கண்காணிப்பு கருவிகளாலும் கண்டுபிடிக்க முடியாத 5ம் தலைமுறை போர் விமானத்தின் பொறியியல் மேம்பாட்டு பணிக்காக, 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவிற்கான ஒப்புதல் கோரி, பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும், பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு 4 ஆண்டுகளில் முதல் மாதிரி விமானம் தயாரிக்கப்படும் எனவும், அதன்பிறகு முழு உற்பத்தி தொடங்கப்பட்டு 2035ம் ஆண்டு முதல் விமானப்படையில் 5ம் தலைமுறை போர் விமானம் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments