கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட கூலித்தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்த 2 பேர் கைது!
புதுச்சேரியில், கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட கூலித்தொழிலாளியை தலையில் கல்லால் அடித்து கொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
உருளையன்பேட்டை ராஜா நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரிடம், நவீனா கார்டனை சேர்ந்த கண்ணன் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி நீண்ட நாட்களாகியும் திருப்பித் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கண்ணன், ரஞ்சித்குமாரின் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி கேட்டதையடுத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரம் அடைந்த கண்ணன் மற்றும் அவரது கூட்டாளி ஜார்ஜ் ஆகியோர், கீழே இருந்த கல்லை எடுத்து ரஞ்சித்குமாரின் தலைமையில் வேகமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தலையில் பலத்த காயமடைந்த ரஞ்சித்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், தலைமறைவாக இருந்த கண்ணன், ஜார்ஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Comments