குடும்பத்தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை முயற்சி.. 14 மாத பெண் குழந்தை பரிதாப பலி!

0 1519

திருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறில், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலைக்கு முயன்றதில், 14 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

சிவக்குமார் - சத்யா தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான மூன்று மாதத்தில் இருந்தே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சிவகுமாரின் பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், பீடி சுற்றும் தொழில் செய்து வந்த சத்யா சிவக்குமாருடன் போராடி வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்றும் பிரச்னை ஏற்படவே சத்யா கோபித்துக் கொண்டு, இரண்டாவது மகளையும், பால்குடிக்கும் 14 மாத குழந்தையான மூன்றாவது மகளையும் வீட்டிலேயே விட்டுவிட்டு, மூத்த மகளை மட்டும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், 14 மாத குழந்தை பாலுக்கு அழுதுள்ளது. அதனை சமாதானம் செய்ய முடியாத சிவக்குமார், இரக்கமின்றி பாலில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு, இரண்டாவது குழந்தைக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து தானும் விஷத்தை குடித்துள்ளார்.

சாப்பாட்டை சாப்பிட்ட 2வது குழந்தை வாந்தி எடுத்ததைக் கண்டு பயந்து போன சிவக்குமார், தனது அண்ணனை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். உடனடியாக அவர் வந்து மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், 14 மாத குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments