அரசாங்கத்தை விமர்சிக்க அம்பானி, அதானி பெயர்கள் எடுக்கப்படுகிறது - சரத்பவார்!

0 6571

தற்போதெல்லாம் அரசாங்கத்தை விமர்சிக்க அம்பானி-அதானி பெயர்கள் எடுக்கப்படுவதாகவும், அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை நாம் சிந்திக்க வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னைகள் போன்றவையே மிக முக்கியமானவை என தான் நினைப்பதாக தெரிவித்தார்.

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை தேசியவாத காங்கிரஸ் ஆதரித்துள்ளதாக தெரிவித்த அவர், ஜேபிசியில் ஆளும் கட்சி ஆதிக்கம் செலுத்தும் என்பதால் உண்மை வெளியே வராது என தெரிவித்தார்.

எனவே உண்மை வெளிவர உச்சநீதிமன்ற கண்காணிப்பு குழு சிறந்தது என தான் நினைப்பதாகவும் சரத் பவார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments