இந்திய விமானப்படையின் போர் விமானத்தில் பயணம் செய்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு..!

0 1985

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதன்முறையாக, அசாமின் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து சுகோய் 30 எம்.கே.ஐ ரக போர் விமானத்தில் பயணித்தார்.

3 நாட்கள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குடியரசுத் தலைவர், இறுதி நாளான இன்று தேஜ்பூர் விமானப்படை தளத்திற்கு சென்றார். அங்கு விமானப்படையினர் வரவேற்பு அளித்தனர்.

பிறகு, விமானப்படையின் சீருடை அணிந்து குடியரசுத் தலைவர், 2 இருக்கைகள் கொண்ட மல்டிரோல் போர் விமானமான சுகோய் 30 எம்கேஐ-ல் பயணம் செய்தார். போர் விமானத்தை பைலட் இயக்க, மற்றோரு இருக்கையில் திரௌபதி முர்மு அமர்ந்து பயணித்தார்.

கடந்த 2009ம் ஆண்டு குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பயணித்தார். அவரைத் தொடர்ந்து, போர் விமானத்தில் பறந்த இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments